ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்திற்காக பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் புர்ஜ் கலீஃபா ஒளிர்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு, அரசு முறை பயணமாக தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபி சென்றடைந்தார். அபுதாபி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார்.
இந்நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் வகையில், உலகில் மிக உயரமான கட்டிடமான துபாயில் இருக்கும் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் இந்தியாவின் மூவர்ணக் கொடி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் படம் உட்பட அவரை வரவேற்கும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
unknown nodeமேலும், பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் முகமது பின் சையதை இன்று சந்திக்கிறார். பின்னர், இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
