மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலி! யாத்திரைக்கு சென்று திரும்பியபோது நடந்த சோக சம்பவம்.!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் யாத்திரைகைக்கு சென்று திரும்பியபோது மின்சாரம் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். யாத்திரைக்கு சென்று திரும்பியவர்கள் பயணித்த டிராக்டரில் அடுக்கடுக்காக ஸ்பீக்கர்கள் கட்டப்பட்டுள்ளது. அந்த ஸ்பீக்கர் மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
டிராக்டரில் 20 பேர் வரை பயணித்த நிலையில், மின்சாரம் அவர்கள் மீதும் பாய்ந்துள்ளது. ஆனால், மின்சாரத்தை துண்டிப்பதற்குள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமிருந்த 14 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்கள்.
விபத்துக்கான காரணங்களை விசாரிக்க கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (நிர்வாகம்) தலைமையில் ஒரு மாஜிஸ்திரேட் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பவான்பூர் காவல் நிலையத்தின் படி, இறந்தவர்கள் பிரசாந்த் சைனி (14), ஹிமான்சு சைனி (16), மகேந்திர சைனி (45), லக்மி (45), மனீஷ் (18), மற்றும் லக்ஷ்யா (12) என தெரியவந்துள்ளது.