BANWvINDW : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வீழ்த்தியது பங்களாதேஷ்..40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!!

இன்று நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்  பங்களாதேஷ் அணி இந்திய மகளிர் அணியை வீழ்த்தி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

BANWvINDW

இன்று நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்  பங்களாதேஷ் அணி இந்திய மகளிர் அணியை வீழ்த்தி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

பங்களாதேஷதிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டி 3 ஒரு நாள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 டி20 கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில், முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பங்களாதேஷ் அணியை பேட் செய்ய அழைத்தது. தொடக்கத்திலே தடுமாறிய பங்களாதேஷ அணி 43 ஓவர்களில் தங்களுடைய அணைத்து விக்கெட்களையும் இழந்து மொத்தமாக 152 ரன்கள் எடுத்து.

அடுத்ததாக 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி நிதானமாக விளையாடி வந்தது. ஆனால், மழை குறுக்கிட்டதன் காரணமாக DLS முறைப்படி 44 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கபட்டது.

இதனையடுத்து, 35.5 ஓவர்களில் இந்திய கிரிக்கெட் அணி மொத்தமாக தனது 10 விக்கெட்களையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன் மூலம், பங்களாதேஷ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜூலை 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.