என்டிஏ கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்கும் – பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் 38 கட்சிகள் கலந்து கொள்கின்றன என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தகவல்.
அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பாஜகவை எதிர்கொள்வது மற்றும் வீழ்த்துவது தொடர்பான வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இதில் ஒரு பகுதி தான் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம். ஏற்கனவே பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் கடந்த மாதம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, பாஜகவுக்கு எதிராக பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது பெங்களுருவில் காங்கிரஸ் தலைமையில் இன்றும், நாளையும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பெங்களுருவில் குவிந்துள்ளனர். மறுபக்கம், மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், நாளை பாஜக தலைமையில் என்டிஏ ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நாளை நடைபெற உள்ள பாஜக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்கின்றனர்.
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, நாளை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் 38 கட்சிகள் கலந்து கொள்கின்றன. கடந்த 9 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சி அபாரமாக இருந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!
July 28, 2025