பெண்களின் உயிரையும் கண்ணியத்தையும் பாதுகாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் – அமைச்சர் உதயநிதி

மணிப்பூரில் 3 மாதங்களுக்கும் மேலாக சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் உதயநிதி ட்வீட்.
கடந்த சில மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய நிலையில்,இந்த வன்முறையில் 100-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். பலர் தங்களது உறவுகளையும், உடமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, மணிப்பூரில் நடந்த இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அமைச்சர் உதயநிதி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது; 3 மாதங்களுக்கும் மேலாக சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது; அங்கு அமைதியை மீட்டெடுக்கவும், பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்கவும் ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Deeply saddened by the reports of two women from Manipur paraded naked by an armed mob. The complete breakdown of law and order that continues for more than three months is unacceptable. The Union Government should step in to restore peace and protect the lives and dignity of…
— Udhay (@Udhaystalin) July 20, 2023