வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க சைபர் கிரைமிடம் கேட்டுள்ளோம்..! மணிப்பூர் முதல்வர்..

வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க சைபர் கிரைமிடம் கேட்டுள்ளதாக மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் கூறியுள்ளார்.
மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் அழைத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது.
இதற்கு பலரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வீடியோ தொடர்பாக கருத்து தெரிவித்த மாநில முதல்வர் என் பிரேன் சிங், சந்தேகத்திற்குரிய பகுதிகளில் குற்றவாளிகளை தேடும்பணி வெகு தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க சைபர் கிரைம் கேட்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், நேற்று இரவே இந்த கொடூரமான குற்றத்தில் தொடர்புடைய ஒரு முக்கிய குற்றவாளியை நாங்கள் கைது செய்துள்ளோம் என்று மணிப்பூர் மாநில முதல்வர் என் பிரேன் சிங் கூறினார்.