#BREAKING: எதிர்க்கட்சிகள் கடும் அமளி! மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

Loksabha Adjourn12

மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு. 

மணிப்பூரில் தொடர் வன்முறையில் நடந்து வரும் நிலையில், பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்து சென்ற வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த சமயத்தில், நாட்டில் பல்வேறு பிராச்சனைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் உடனடியாக பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று முதல் நாளே நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது.

இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கையில் பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கங்களை எழுப்பினர். இதனால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே, மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை ஜூலை 24ம் தேதிவரை (திங்கள்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்