விரைவில் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா – படக்குழு அறிவிப்பு!

jailer audio launch

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் தமன்னா, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தற்போது, ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, ஜூலை 28 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரை நடந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதை வீடியோவாக வெளியிட்டு மிரட்டியுள்ளனர். இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘hukum huku’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.  படம் வரும் ஆகஸ்ட் 10 -ம் தேதி திரையங்குகளில் வெளியாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்