மணிப்பூர் சம்பவம் எதிரொலி: மெரினாவில் பலத்த பாதுகாப்பு!

மணிப்பூர் வன்முறை எதிரொலி, சென்னை மெரினாவில் கூடுதல் போலீஸ் குவிப்பு.
மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், மணிப்பூரில் இரு பெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து மெரினா கடற்கரையில் கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.