செந்தில் பாலாஜி சகோதரருக்கு 4 முறை சம்மன்.! அமலாக்கத்துறை விசாரணை தீவிரம்.!

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் நேரில் ஆஜராக இதுவரை அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் சம்பந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் நேரில் விசாரணைக்கு வர வேண்டும் என் அமலாக்கத்துறை இதுவரை 4 முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் இதுவரை நேரில் ஆஜராகவில்லை. இதனால் அவரை தேடும் பணி அமலாக்கத்துறையால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 27ஆம் தேதிக்குள் அவர் நேரில் ஆஜாரவில்லை என்றால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இந்நிலையில், அசோக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் அவரால் விசாரணைக்கு வரமுடியவில்லை என்றும், அவருக்கு வீட்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அதனால் 4 வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.