டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம்… இந்தியா புதிய வரலாற்று சாதனை.!

வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி அதிவேகமாக 100 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளது.
வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் வென்று தொடரில் 1-0 றன முன்னிலை வகிக்கும் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை தேர்வு செய்ய முதல் இன்னிங்சில் இந்தியா 438 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக விராட் கோலி தனது 500ஆவது போட்டியில் சதமடித்து (121 ரன்கள்) சாதனை படைத்திருந்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதலில் நிதானமாக விளையாடினாலும் பின்னர் விளையாடிய வீரர்கள் வந்தவேகத்தில் விக்கெட்களை இழக்க 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
183 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா இரண்டாவது இன்னிங்சில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் சேர்ந்து 12.2 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்து டெஸ்ட்களில் அதிவேகமாக 100 ரன்கள் எடுத்த அணி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்பாக 2001இல் இலங்கை அணி 13.2 ஓவர்களில் வங்கதேசத்துக்கு எதிராக 100 ரன்கள் எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்துவந்தது. இந்த சாதனையை இந்தியா நேற்று முறியடித்துள்ளது. ரோஹித் அரைசதம் (57 ரன்கள்) அடித்த நிலையில் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் 38 ரன்களுக்கு விக்கெட் இழந்தார்.
இந்தியா 24 ஓவர்களில் 181/2 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. 4 ஆமா நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.