கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் இன்று தமிழகம் முழுவதும் தொடங்கிவைக்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள படி மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பப்படிவ முகாம்கள் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டம் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கான விண்ணப்பபடிவங்கள் ஏற்கனவே முதற்கட்டமாக கொடுக்கப்பட்ட நிலையில், விண்ணப்பபடிவங்களை பதிவு செய்யவும் அதனை பதிவேற்றம் செய்யவும் தமிழகம் முழுவதும் 35000 க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் தொப்பூரில் இன்று சிறப்பு முகாமை தொடங்கி வைக்கிறார்.
