டிவி விவாதத்தில் இஸ்லாமிய பெயர்.. புகார் அளித்த பாஜக பிரமுகர்… ஆம் ஆத்மி பிரமுகர் மீது வழக்குப்பதிவு.!

டிவி விவாதத்திதின் போது முஜாஹிதீன் என அளித்ததற்காக பாஜக பிரமுகர், ஆம் ஆத்மி பிரமுகர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஜூலை 25 அன்று ஒரு தனியார் சேனல் தொலைக்காட்சி விவாதத்தின் போது ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர், பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு விவாதித்தனர். அப்போது ஷெஹ்சாத் பூனவல்லாவை, பிரியங்கா கக்கர், “முஜாஹிதீன்” எனும் இஸ்லாமிய பெயர் கொண்டு அழைத்தாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து , பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, இஸ்லாமியரான தன் மீது கக்கர் வகுப்புவாத கருத்துக்களை கூறினார் என்று பிரியங்கா கக்கர் மீது உத்திர பிரதேச மாநிலம் நொய்டா காவல் நிலையத்தில் ஷெஹ்சாத் பூனவல்லா புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பெயரில் மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவினர் இடையே பகைமையை வளர்ப்பது உட்பட ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆம் ஆத்மி பிரமுகர் பிரியங்கா கக்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆம் ஆத்மி பிரமுகர் பிரியங்கா கக்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஷேஜாத்” என்றால் பயங்கரவாதி என்று அர்த்தமா? “முஜாஹிதீன்” என்றால் பயங்கரவாதி என்று பொருள்படுமா? “ஷெஹ்சாத் முஜாஹிதீன்” என்றால் பயங்கரவாதி என்று அர்த்தமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும், தேசிய ஊடகங்களில் ஒரு முதலமைச்சரை “ஜிஹாதி” என்று குறிப்பிட புகார்தாரருக்கு அனுமதி உள்ளதா? புகார்தாரரின் முந்தைய நடவடிக்கைகளை கொஞ்சம் பாருங்கள் என அந்த டிவிட்டர் பதில் ஆம் ஆத்மி பிரமுகர் பிரியங்கா கக்கர் குறிப்பிட்டள்ளார்.
1. Does “Shehzad” mean terrorist?
2. Does “Mujahideen” mean terrorist?
3. Does “Shehzad Mujahideen” mean terrorist?
4. Is the Complainant allowed to refer to a Chief Minister as “Jihadi” on national media?
5. The previous conduct of the Complainant.
6. Is it okay to refer a… https://t.co/mTpHH9w5xB— Priyanka Kakkar (@PKakkar_) July 26, 2023