11ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் நடந்து முடிந்த 11ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தேர்வர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
விடைத்தாள் நகல்பெற, தேர்வு முடிவுகள் மீது மறுகூட்டல்/மறு மதிப்பீட்டிற்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7.73 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, பொதுத்தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவிகளில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 3,91,968 மாணவர்கள், 3,14,444 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.