உருவாகிறது ‘சர்தார் 2’ திரைப்படம்! இந்த முறை இசை யாருடையது தெரியுமா?

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இதை கடந்த ஆண்டு முதல் பாகம் வெற்றி விழாவின் போது, தயாரிப்பாளர்கள் உறுதி செய்தனர். அதன்படி, இரண்டாம் பாத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அநேகமாக, இந்த வருடம் இப்படம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ‘சர்தார் 2’ படத்தின் புதிய அப்டேட் என்னவென்றால், படத்திற்கான இசையமைப்பாளரைத் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாம் பாகத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சர்தார் 2 படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு பதிலாக யுவன் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி உண்மை என்றால், கார்த்தி – மித்ரன் மற்றும் யுவன் இடையே மூன்றாவது கூட்டணியைக் குறிக்கும். இவர்கள் இருவரும் இதற்கு முன்னதாக, இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.