ஆஸ்திரேலிய கடற்கரையில் கிடந்த மர்ம பொருள் இந்திய ராக்கெட்டின் ஒரு பகுதி..! ஏஎஸ்ஏ உறுதி..!

PSLV

ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் இந்திய ராக்கெட்டின் ஒரு பகுதி என்று ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் (ஏஎஸ்ஏ) உறுதிப்படுத்தியுள்ளது. சுமார் 2 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பொருள் சந்திரயான்-3 ஏவப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஜூரியன் அருகே கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்பத்தில், இது 2014ல் இந்தியப் பெருங்கடலில் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் துண்டு எனக் கூறப்பட்டது. ஆனால், 2017ம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) ஏவப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பகுதி என ஆஸ்திரேலியா விண்வெளி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

பிஎஸ்எல்வி செயற்கைக்கோள்களை சுற்றுவட்டப்பாதையில் செலுத்த பயன்படும் நான்கு நிலை ராக்கெட் ஆகும். பிஎஸ்எல்வியின் மூன்றாம் நிலை திட எரிபொருள் மோட்டாரால் ஆனது மற்றும் செயற்கைக்கோள் ஏவப்பட்ட பிறகு பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருள் பிஎஸ்எல்வியின் மூன்றாம் கட்டத்துடன் ஒத்துப்போகிறது என்று ஏஎஸ்ஏ தெரிவித்துள்ளது. இந்த பொருள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்றும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அப்புறப்படுத்தப்படும் என்றும் ஏஎஸ்ஏ தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்