இந்த முறை இந்திய அணி தான் சாம்பியன்.! ஆசிய ஹாக்கி கோப்பை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை.!

7வது சர்வதேச ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்த வருடம் சென்னையில் நடைபெற உள்ளது. நாளை (ஆகஸ்ட் 3) முதல் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த போட்டி சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த 7வது சர்வதேச ஆசிய கோப்பை விளையாட்டு போட்டியில் இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் , சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகளை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து இன்று சென்னையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், இந்தியா உள்ளிட்ட மலேசியா, பாகிஸ்தான் , சீனா, ஜப்பான், தென் கொரியா என 6 நாடுகள் பங்கேற்கின்றன.
கடந்த முறை தென் கொரியா ஆசிய கோப்பையை கைப்பற்றி நடப்பு சாம்பியனாக இருக்கிறது. ஆனால் இந்த முறை எங்களுக்கு நம்பிக்கை உள்ளது இந்தியா இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும். நாளை இந்திய அணியானது சீனாவை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பை விளையாட தமிழகம் வந்துள்ள அனைத்து வீரர்களையும் மனநிறைவுடன் வரவேற்கிறோம் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025