எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றியவர் கைது..!

சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை மீது சிவப்பு நிற பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது. மர்மநபர்கள் வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலை

Arrest

சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை மீது சிவப்பு நிற பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது. மர்மநபர்கள் வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட்டை  ஊற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அதிமுகவினர், சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது, எம்ஜிஆர் சிலையின் மீது பெயிண்டை ஊற்றிய லியோ நாட்(42) என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்  எந்த கட்சியையும் சேராதவர் என காவல்துறை தலைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.