வாயில் சுருட்டுடன் மிரட்டும் பகத் பாசில்! பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர்!

நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘புஷ்பா-2’ படக்குழு.
புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், தற்போது இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா பகத் பாசில், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பகத் பாசிலின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படக்குழுவினர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்தில், பகத் பாசில் பன்வர் சிங் ஷெகாவத் என்ற போலீஸ் அதிகாரியாக நெகடிவ் ரோலில் நடிக்கிறார்.

போஸ்டரில் பகத் பாசில் ஒரு சுருட்டு புகைப்பதை போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது கதாபாத்திரத்துடன் ஒத்துப்போகும் ஸ்டைலான தோற்றத்தில் சும்மா மிரட்டியிருக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள புஷ்பா 2 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.