மணிப்பூரில் 2 மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு!

மணிப்பூர் மாநிலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேல் வன்முறை, பாலியல் வன்கொடுமை என அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவத்தால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதனால், மாநிலத்தில் மோதல்கள் மற்றும் வன்முறை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, முதல் கட்டமாக 9,10,11,12ம் வகுப்புகள் இன்று ஆகஸ்ட் 10, 2023 மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது, திறக்கப்பட 9 முதல் 12 வகுப்புகள் கொண்ட 1229 பள்ளிகள் பல்வேறு நிர்வாகங்களால் கண்காணிக்கப்படுகின்றன. மேலும், நிவாரண முகாம்களாக செயல்படும்குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு திறப்பு குறித்து விரைவில் தனி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.