தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் ஆசோதா மாநிலங்களவையில் தாக்கல்..!

கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம் தொடர்பாக தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
விரிவான விவாதத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி அளிக்காத காரணத்தால், நாடாளுமன்ற மக்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தனர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டு நாள் நடைபெற்ற நிலையில், இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். இன்று பிரதமர் மோடி பதிலுரை அளித்த பின்பு குரல் வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் ஆசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால் மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார்.
கடந்த மார்ச் மாதம், தலைமை தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி அடங்கிய இக்குழுவில் தலைமை நீதிபதியை நீக்கி, பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒன்றிய அமைச்சர் இருப்பார் என புதிய மசோதா இயற்றப்பட்டுள்ளது.
மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணைய நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.