1,87,275 விவசாயிகளுக்கு நிவாரண நிதி – தமிழக அரசு அறிவிப்பு

TNGovt

தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.181 கோடி நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு. வடகிழக்கு பருவமழை குறைந்த காரணத்தினால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு வறட்சி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 1,87,275 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.181 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் போதிய மழை இல்லாததால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்ட்டுள்ளது. 1,42,832 ஹெக்டர் பரப்பிலான விளைநிலங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மாநில வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்