பாஜக அழித்த மணிப்பூரை காங்கிரஸ் கட்டமைக்கும்.! ராகுல் காந்தி பேச்சு.!

அவதூறு வழக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை, மேல்முறையீடு , நீதிமன்ற தீர்ப்பு பின்னர் மீண்டும் எம்பி பதவி பெற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்துகொண்டார் ராகுல் காந்தி. மழைக்காக கூட்டத்தொடரில், மணிப்பூர் விவகாரம் பற்றிய நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உரையாற்றினார்.
தற்போது 2 நாள் பயணமாக தனது சொந்த மக்களவை தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு ராகுல்காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து ஊட்டி சென்று பின்னர் சாலை மார்க்கமாக வயநாடு சென்றார். அவர் நேற்று வயநாட்டின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மணிப்பூரில் தற்போதைய மோசமான சூழ்நிலையை விட பாதிப்படைந்த சூழலை எனது முழு வாழ்க்கையிலும் பார்க்கவில்லை. பிரதமர் மோடி 2 மணி நேரம் நாடாளுமன்றத்தில் பேசினார், ஆனால் மணிப்பூரைப் பற்றி 2 நிமிடம் கூட பேசவில்லை. அவர் தனது அமைச்சரவையில் மணிப்பூர் பற்றி பேசுகையில் கேலி கிண்டல் செய்து சிரித்தார். மணிப்பூரை பாஜக அழித்துவிட்டது அதனை காங்கிரஸ் நிச்சயம் மீட்டெடுக்கும் என்றும் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.