3வது முறையாக கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில், முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு, இந்திய தேசிய கொடியை ஏற்றினார்.
அதே போல மாநில தலைநகரங்களும் அந்தந்த மாநில முதல்வர்கள் தேசிய கொடி ஏற்றிவைக்க உள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசிய கோடி ஏற்றி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வராக பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 3வது முறையாக தேசிய கொடி ஏற்றவுள்ளார். அதன் பிறகு தகைசால் தமிழர் விருது உட்பட பல்வேறு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!
July 14, 2025