77thIndependenceDay Live : 2047இல் வளர்ந்த இந்தியா உருவாகும்… பிரதமர் மோடி உரை..

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 10வது முறையாக தேசிய கோடி ஏற்றினார். கடந்த 2014இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கோடி ஏற்றி வருகிறார்.
முன்னதாக டெல்லியில் மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து செங்கோட்டை நோக்கி புறப்பட்டார் பிரதமர் மோடி. பின்னர் ராணுவ வீரர்களின் பாதுகாப்போடு செங்கோட்டை வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கு முப்படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி இந்திய தேசிய கோடியை செங்கோட்டையில் ஏற்றினார். அதன் பிறகு நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அதில் பல்வேறு தகவல்களை பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார். பிரதமர் உரையில், நமது நாட்டில் அனைவருக்கும் முன்னேறுவதற்கு எல்லையற்ற வாய்ப்புகள் உள்ளது. அதனை வழங்கும் திறன் நமது நாட்டிற்கு உண்டு.
கோவிட்19 தொற்றுக்கு பிறகு, ஒரு புதிய உலகம், புதிய புவி-அரசியல் உருவாகியுள்ளது. புவிசார் அரசியலின் வரையறை மாறுகிறது. இன்று, புதிய உலக உலகை வழிநடுவதில் இந்தியா முன்னிலை பெற்று விளங்குகிறது.
இந்தியாவின் திறன் மற்றும் முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் புதிய உச்சங்களை கடக்கப் போகிறது என்பது உறுதி. புதிய திறன்களுடன் இந்தியா புதிய உயரங்களை எட்டும். இன்று, ஜி20 மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. கடந்த ஆண்டில், இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் G20 இன் பல நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் மூலம், இந்தியாவின் சாமானிய மக்களின் திறனை, இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகம் அறிந்துள்ளது.
பாரம்பரிய திறன் கொண்டவர்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விஸ்வகர்மா எனும் திட்டம் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதற்காக 13,000 முதல் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலகப் பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இந்தியா இருந்தது. இன்று 140 கோடி இந்தியர்களின் முயற்சியால் 5வது இடத்திற்கு வந்துவிட்டோம். நாட்டின் ஊழலை தடுத்து வலுவான பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளோம் எனவும் பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மதுரையில் மாநாடு.., தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு.!
July 14, 2025