வேல்முருகனின் சுங்கச்சாவடி தாக்குதல் வழக்கு ரத்து!

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடில் தாக்குதலில் ஈடுபட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற கோரி கடந்த 2018ம் ஆண்டு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில், போரட்டம் நடத்தியபோது தாக்குதலில் ஈடுபட்டதால், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதனால், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025