பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 நாடுகள்! தென் ஆபிரிக்கா அதிபர் சிரில் ராம்போசா அறிவிப்பு!

‘பிரிக்ஸ்’ அமைப்பில் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ரஷ்யா, ஆகிய 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதனையடுத்து, பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற நிலையில், அனைத்து தலைவர்களும் இணைந்து குழு புகைப்படம் எடுத்தனர்.
பிறகு பேசிய அவர், ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை சேர்க்க பிரிக்ஸ் நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், தற்போது பிரிக்ஸ் அமைப்பில் அர்ஜென்டினா, எதியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, யுஏஇ ஆகிய நாடுகள் இனி நிரந்தர உறுப்பு நாடுகளாக பங்கேற்கும் என்று பிரிக்ஸ் மாநாட்டின் இறுதி நாளில் தென் ஆபிரிக்கா அதிபர் சிரில் ராம்போசா அறிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் ” அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை பிரிக்ஸ் அமைப்பில் முழு உறுப்பினர்களாக ஆக்குவதற்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உடன்பாடு செய்துள்ளது. ஜனவரி 2024 முதல் இந்த நாடுகள் அமைப்பின் முழு உறுப்பினர் ஆவார்கள்” என தெரிவித்துள்ளார்.