#BREAKING: மின்னூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு அலர்ஜி..! 33 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. பள்ளியில் பயிலும் 33 மாணவர்கள் உட்பட ஒரு ஆசிரியருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அலர்ஜி ஏற்பட்ட மாணவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக ஆசிரியர்கள் அனுமதித்துள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை சந்தித்து மாவட்ட ஆட்ச்சியர் நலம் விசாரித்து வருகிறார்.
மாணவர்களுக்கு இத்தகைய அலர்ஜி எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.