US Green Card : சுமார் 4 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக காத்திருந்து உயிரிழக்க கூடும்.! வெளியான அமெரிக்க ஆய்வறிக்கை.!

US Visa for Indians

ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டில் தங்கி வேலை செய்வதற்காக நிரந்தரமாக குடியேறுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. எல்லா நாட்டிலும் பொதுவாக பிறப்பால் குடியுரிமை வழங்கப்படும். அதனைத் தவிர்த்து நீண்ட ஆண்டுகள் அங்கு வேலை செய்தாலோ அல்லது அந்த நாட்டின் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தாலோ குடியுரிமை வழங்கப்படும்.

அப்படி வெளிநாட்டில் வேலை செய்ய நினைக்கும், செய்து வரும் பலரது கனவாக இருப்பது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவது தான். பொருளாதாரத்தில் முன்னேறிய அமெரிக்காவில் கொடுக்கப்படும் கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமையானது, அமெரிக்காவில் கால வரையின்றி தங்கி வேலை செய்வதற்கு நிரந்தர உரிமை தருகிறது. இதனை பெறுவதற்கு விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் குவிந்து வருகிறது.

ஆனால் அந்நாட்டு சட்டதிட்டத்தின் படி குறிப்பிட்ட ஒவ்வொரு ஆண்டிற்கும் குறிப்பிட்ட அளவின்படியே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றவை காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்கப்படும் அவை மீண்டும் பரிசீலக்கப்படும்.  இது பற்றிய ஒரு ஆய்வு அறிக்கையை அண்மையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்டது. அதில் நடபாண்டில் இதுவரை 1.8 மில்லியன் நபர்கள் கிரீன் கார்டு வேண்டி விண்ணப்பித்ததாக குறிப்பிடபட்டுள்ள்ளது.

ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அந்நாட்டு மக்கள் தொகையில் 7%  பேர் மட்டுமே கிரீன் கார்டு வைத்து இருக்க முடியும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் விண்ணப்பித்த 1.7 லட்சம்  பேரில் சுமார் 80 ஆயிரம் பேரின் மனுக்கள் நிலுவையில் உள்ளன என்றும், அவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் விண்ணப்பித்து உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தாண்டு 13 லட்சம் விண்ணப்பங்கள் காத்திருப்பு பட்டியலிலும் 2.89 லட்சம் விண்ணப்பங்கள் ஆவணங்கள் சரிபார்ப்பிலும் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் கூற்றுப்படி 4.24 லட்சம் விண்ணப்பதாரர்கள் தங்களது கிரீன் கார்டுகளுக்காக காத்திருந்து தங்கள் ஆயுள் முழுவதையும் வீணடிக்க கூடும் என்றும், அதில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kallazhagar - Madurai
Ramadoss
retro karthik subbaraj
narendra modi ind vs pak war
modi and rajinikanth
Rajnath Singh