M.G.R : நீச்சல் அடித்துக் கொண்டு பாக்க வந்த மக்கள் கூட்டம்! பணத்தை அள்ளி வீசிய எம்.ஜி.ஆர்!

நடிகர் எம்.ஜி.ஆர் தன்னை பார்க்க வரும் மக்களுக்கு பணம் கொடுக்கவேண்டும் என்றால் அந்த பணத்தை எண்ணி எல்லாம் கொடுக்கவே மாட்டார். கட்டு கட்டாக கையில் இருக்கும் பணத்தை எண்ணி கூட பார்க்கலாம் சும்மா எடுத்துக்கொடுப்பாராம். இதனை அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் மற்றும் சில பத்திரிகையாளர்கள் பேசி நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், எம்.ஜி.ஆர் பரிசு படத்தின் படப்பிடிப்பின் போது மழைவாழ் மக்களுக்கு பணத்தை அள்ளி வீசிய சம்பம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
பரிசு படத்தின் படப்பிடிப்பு ஏரி ஒன்றின் அருகில் நடந்துகொண்டு இருந்ததாம். அந்த சமயம் எம்.ஜி.ஆர் அங்கு இருப்பதை அறிந்த மலைவாழ் மக்கள் வேகமாக நீச்சல் அடித்துக்கொண்டு கரைக்கு வந்து எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார்களாம். விழுந்த பிறகு என் இவ்வளவு வேகம் எங்கு இருந்து நீங்கள் வருகிறீர்கள்? என எம்.ஜி.ஆர் நலம் விசாரித்தாராம்.
பிறகு அந்த மலைவாழ் மக்கள் ஐயா நாங்கள் இங்கு மலைக்கு கீழே வசிக்கும் மலைவாழ் மக்கள் நீங்கள் இங்கு இருப்பதாக சொன்னார்கள் உங்களை பார்க்கவேண்டும் என ஆசையாக வந்தோம் என கூறினார்களாம். பிறகு எம்.ஜி.ஆர் உள்ளே சென்று கை நிறைய கட்டு கட்டாக பணத்தை எடுத்து எண்ணி கொடுக்காமல் அள்ளி வீசினாராம்.
எம்ஜிஆர் எப்போதுமே பணத்தை எண்ணி கொடுக்க மாட்டார் என்பதால் அந்த மலைவாழ் மக்கள் வந்தவுடன் பணக்கட்டில் இருந்து பாதி பாதி பணத்தை எடுத்து முறுக்கி அதனை எண்ணி கூட பார்க்காமல் அங்கு வந்த மலைவாழ் மக்களுக்கு கொடுத்தாராம். இதனை பார்த்து இன்ப அதிர்ச்சியான அந்த மக்கள் மீண்டும் எம்.ஜி.ஆர்.காலில் விழுந்தார்களாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான எல்விஆதவன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் உயிரோடு இருந்த சமயத்தில் இது போல பல உதவிகளை செய்துள்ளார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி தன்னை தேடி வந்தவர்களுக்கு பணத்தை கொடுத்து உதவிய காரணத்தால் எம்ஜிஆரை அந்த சமயமே பலருக்கும் பிடித்தது என்றே கூறலாம். மேலும், 1963 -ஆம் ஆண்டு வெளியான பரிசு திரைப்படம் மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025