Viral: வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத வியாபாரி.! நிர்வாணமாக்கி அழைத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம்.!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பழச்சந்தையில் தன்னிடம் கடன் வாங்கிய நபரை, கடனைத் திருப்பி தராததால் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ சமூக

Paraded Naked

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பழச்சந்தையில் தன்னிடம் கடன் வாங்கிய நபரை, கடனைத் திருப்பி தராததால் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவில் பூண்டு வியாபரி ஒருவர் ரூ.5,100 கடன் வாங்கியுள்ளார். அதில் அவர் ரூ.3,100 பாக்கித் தரவேண்டியிருந்துள்ளது. இதனால் கடன்தாரர் தனது பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். அப்பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த தகராறில் ஆத்திரமடைந்த கடன்தாரர் வலுக்கட்டாயமாக, அந்த பூண்டு வியாபாரியை நிர்வாணமாக்கி, சந்தையில் ஊர்வலமாக கூட்டிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான சிறிது நேரத்திலேயே, கடன்தாரர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

unknown node