டெங்கு காய்ச்சல்: தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 1,000 சிறப்பு மருத்துவ முகாம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஆங்காங்கே பரவி வருகிறது. இதனால், ஏற்படும் தீவிர காய்ச்சல் காரணமாக ஒரு சில மரணங்களும் தமிழகத்தில் நிகழ்ந்துவிட்டன. இந்நிலையில், இந்த டெங்கு பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, டெங்கு ஒழிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ஆம் தேதி 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை குழுக்களும், பள்ளி மாணவர்களுக்கான 805 குழுக்களும் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.