மல்யுத்த வீரருடன் தூய்மைப் பணியில் பிரதமர் மோடி! வைரலாகும் வீடியோ!

அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாள் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாடு முழுவதும் ‘தூய்மை இந்தியா திட்டதின்’ கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று ஒரு மணி நேரம் தூய்மை இயக்கத்தில் பங்கேற்று குப்பைகளை அகற்றினர்.
அதைப்போல, உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்திலும், பாஜக தலைவர் ஜேபி நட்டா டெல்லியிலும் கலந்துகொண்டனர். இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று மல்யுத்த வீரர் அங்கித் பையன்புரியாவுடன் இணைந்து தன் கைகளால் குப்பைகளை அகற்றினார். அவருடன் இணைந்தது அங்கித் பையன்பூரியாவும் குப்பைகளை அகற்றி குப்பை தொட்டியில் போட்டனர்.
இது தொடர்பான வீடியோவையும் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மோடி கூறியதாவது ” தூய்மையே சேவை இயக்கத்தில் நம்மளுடைய தேசமே கவனம் செலுத்தி வருகிறது. எனவே, இன்று காலை நானும் அங்கித் பையன்புரியாவும் இந்த தூய்மை பணியில் ஈடுபட்டோம். உடற்தகுதி மற்றும் நல்வாழ்வை பற்றியும் நாங்கள் கலந்துரையாடினோம்” எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும், 2014-ல் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அன்று இந்தியா முழுவதும் சுகாதாரம், தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘தூய்மை இந்தியா’ எனும் புதிய திட்டம் ஒன்றை தொடங்கி வைத்தார். கடந்த 8-ஆண்டுகளாக இந்த திட்டத்தின் மூலம் அக்டோபர் 1-ஆம் தேதி சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025