திமுக எம் பி ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித்துறை சம்மன்!

கடந்த 5 நாட்களாக நீடித்த சோதனைக்கு பிறகு திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சில நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூரில் ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய கல்வி நிலையங்கள், மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, ஹோட்டல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வரை 5 நாட்களாக சோதனை நடைபெற்றது.
அதுமட்டுமில்லாமல், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்து சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு புகாரில் கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதில், 4.5 கோடி ரூபாய் பணம் 2.7 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் நேற்று சுமார் 10 மணிநேரம் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மருமகன் நாராயணசாமி இளமாறன், மகள் ஸ்ரீனிசா ஆகியோரிடம் தனித்தனியாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர் எனவும் கூறப்பட்டது.
ஜெகத்ரட்சகன் நடத்தி வந்த அறக்கட்டளையின் வரி விலக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார். இந்த நிலையில், 5 நாட்கள் நாட்கள் நடைபெற்ற சோதனை நேற்று நிறைவு பெற்ற நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025