முதல்வரானார் நடிகர் விஜய்? கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து…வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு!

மதுரை விஜய் ரசிகர்கள் சார்பில், விஜய் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்று கொண்டார் என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் வேகமெடுத்து வருகிறது என்றே கூறலாம். அண்மையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற முதல் இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகையை வழங்கினார்.
இதை வைத்து பார்க்கும்பொழுது, வரும் காலங்களில் அவர் தேர்தலிலேயே களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக சில இணையதள நெட்டிசன்கள், சினிமா விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர். ஏனெனில், அந்த அளவுக்கு விஜய்யின் மக்கள் இயக்கம் செயல்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
அந்த வகையில், அடிக்கடி விஜய்யின் ரசிகர்கள் பரபரப்பான போஸ்டர்களை தெருவோரமாக ஓட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விடுவார்கள். வழக்கம் போல, தற்போது மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு தலைமை தளபதி விஜய் மர்கள் இயக்கம், தினத்தந்தி நாளிதழ் வடிவில் ஒரு போஸ்டரை அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அவர்கள் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், நடிகர் விஜய் தமிழக முதல்வரானதாகவும், கூட்டணி கட்சி தலைவர்களான ஓபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், GK வாசன், அண்ணாமலை ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தது போல புகைப்படமும் வாசகமும் இடம்பெற்றுள்ளது.
மேலும் அதில், “மத்தியில் பாஜக ஆட்சி, மாநிலத்தில் விஜய்யின் ஆட்சி” என குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைபேசியில் பாரதப் பிரதமர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பதவி ஏற்பு விழாவிற்கு மோடி தமிழகம் வருகை, தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்தது என்று பொதுமக்கள் பேட்டி கொடுத்தனர்.
முதல்வராக பொறுப்பெற்ற கொண்டதும், விஜய் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள் என்றெல்லாம் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என பலமுறை மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கி வருகிறார். இருந்தாலும், விஜய் ரசிகர்கள் தங்களது மன்றத்தின் பெயர்களை குறிப்பிடாமல், போஸ்டரை அடித்த ஒட்டி வருகின்றனர். இதற்கிடையில், சமீபத்தில் வெளியான ‘லியோ’ டிரைலர் பார்க்கும் காட்சியை வானதி சீனிவாசன் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025