ஆசிரியர்களின் கோரிக்கையை சரி செய்ய புதிய செயலி.! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.!

Minister Anbil Mahesh

சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில், பகுதிநேர ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், இடைநிலை ஆசியர்கள் என பல்வேறு ஆசிரியர்கள் அமைப்பினர் தங்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த போராட்டத்தை தொடர்ந்து, பள்ளிக்கல்விதுறை உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் தோல்வி ஏற்பட்டு, அதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அதில் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது. அப்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும் , பணிநிரந்தரம் தொடர்பாக குழு அமைத்து 3 மாதத்தில் அந்த கோரிக்கைகள் சரி செய்யப்படும் என கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் ஆசிரியர்கள் கோரிக்கைகள் பற்றி பேசினார். அவர் கூறுகையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற புதிய செயலி உருவாக்கப்படும் எனவும், அதில் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை பதிவிடலாம்.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.  தாமதமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செயல்பட்டால் அது நிர்வாக குறைபாடாகவே எடுத்துக்கொள்ளப்படும். அதனால் ஆசிரியர்கள் கோரிக்கைகள் உடனடியாக கண்டறிந்து அதற்கான நடடிக்கை எடுக்கப்படும்.

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது முதல் அதில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வழக்கமான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். மழையால் பாதிக்கப்பட்ட கட்டடங்கள், மின் இணைப்பு, மின் மோட்டார் போன்றவை ஆய்வு செய்யப்படும.

தீபாவளி முடிந்தவுடன் பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்புகள் வரும். அடுத்த வருடம் ஏப்ரல் , மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் அதற்கான வேலைகளுக்கு முன்னர் பொது தேர்வு வேலைகளை முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies