அடுத்த ஒரு மாதத்தில் 152 புதிய மருத்துவமனைகள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.! 

Tamilnadu Minister Ma Subramanian

வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இன்னும் மழை மேலும் ஒரு வாரத்திற்கு  பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை தொடக்கதிற்கு முன்பிருந்தே தமிழக சுகாதாரத்துறை மழைக்கால நோய் தடுப்பு பணிகளை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.

இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது! 

அவர் கூறுகையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பெயரில் வாரந்தோறும் தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்னரே மருத்துவ முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இரண்டு வார முகாம்கள் முடிந்த நிலையில், இன்று 3வது வாரமாக மருத்துவ முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன.

வாரம் 1000 முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வாரம் 1900 முகாம்கள் நடத்தப்பட்டன. இரண்டாம் வாரம் 2200 முகாம்கள் நடத்தப்பட்டன. டிசம்பர் மாதம் வரையில் பருவமழை தொடரும் என்பதால் டிசம்பர் மாத இறுதி வரையில் மருத்துவ முகாம்கள் தொடரும்.

பருவகால நோய்களான மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு, சேத்துப்புண் ஆகிய நோய்கள் பரவ வாய்ப்புள்ளன. இதனை தடுக்கவே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மருத்துவ முகாம்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் பயன் பெற்றுள்ளனர். இதில் 300 – 400 பேர் காய்ச்சல் பாதிப்பு அடைந்தவர்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக நவம்பர் 25ஆம் தேதி, டிசம்பர் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெறும். 4076 மருத்துவ குழுக்கள் தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்களில் பணியாற்றி வருகின்றனர். 805 நடமாடும் மருத்துவ வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

2012 முதல் 2017 காலகட்டத்தில் அதிக டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது முதல்வரின் நடவடிக்கையில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியை போல, தமிழகத்திலும் நகர்ப்புற நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.  அடுத்த ஒரு மாதத்தில் சென்னையில் 40 மருத்துவமனைகள், 112 மருத்துவமனைகள் என மொத்தம் 152 புதிய மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK STALIN - T N GOVT
CM MK Stalin
INDvsENG
Tiruchendur - Murugan Temple
vaibhav suryavanshi shubman gill
laura loomer donald trump