மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல்..!

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்தது. நாடாளுமன்ற நன்னடத்தை குழு இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த மாதம் விசாரணை குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகுவா மொய்த்ராவை பதவி நீக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார்.
வாடிக்கையாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய TVS நிறுவனம்..!
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மகுவா மொய்த்ராவுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நாடாளுமன்ற நன்னடத்தை குழு தலைவர் வினோத் சோங்கர் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா தனது தரப்பை விளக்கப் போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025