மிக்ஜாம் புயல் பாதிப்பு.! 4 மாவட்ட மின் கட்டணம் எவ்வளவு.? வெளியான முக்கிய தகவல்…

மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்னும் புறநகர் பகுதியில் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகிறது.
மிக்ஜாம் புயல் பாதிப்பு ஆய்வு.! முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று மத்திய குழு முக்கிய ஆலோசனை.!
ஏற்கனவே பாதிக்கப்பட்ட 4 மாவட்ட பகுதி மக்களுக்கு, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.6000 உதவி தொகை வழங்கப்படும் எனவும், அவை ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் மின்கட்டணம் குறித்தும் அறிவிப்பை தமிழக மின்சாரத்துறை அறிவித்தது. அதன்படி வெள்ள பாதிப்புகள் காரணமாக மின் கட்டணம் எந்தவித அபராதமும் இன்றி செலுத்த டிசம்பர் 18 வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் 4 முதல் 6 வரையில் அபாரதத்துடன் பயனர்கள் மின் கட்டணம் செலுத்தி இருந்தால் அந்த அபராத தொகை அடுத்த முறை மின் கட்டணத்தில் கழித்து கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்து. இதனை தொடர்ந்து தற்போது டிசம்பர் மாத மின் கணக்கீட்டிற்கு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக மின் அளவீடு பல்வேறு பகுதிகளில் எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால் , டிசம்பர் மாதம் மின் கட்டணமானது கடந்த அக்டோபர் மாத கணக்கீட்டின்படியே மின் கட்டணத்தை செலுத்த பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025