சர்ச்சில் வச்சு தப்பா தொட்டாங்க! பாடகி பிரியா ஜெர்சன் வேதனை!

சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் பாடகி பிரியா ஜெர்சன். இவர் சூப்பர் சிங்கர் சீசன் 9 இறுதிப்போட்டியில் ‘கால் முளைத்த பூவே’ பாடலை பாடி அசத்தி இருந்தார். எனவே இவர் தான் டைட்டில் வின்னர் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு இரண்டாவது இடமாக ரன்னர் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பாடகி பிரியா ஜெர்சனுக்கு படங்களில் பாடும் வாய்ப்புகளும் வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அவர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடலை பாடவுள்ளார். இந்த நிலையில்,பிரியா ஜெர்சன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது தனக்கு சிறிய வயதில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி பேசியுள்ளார்.
தப்பான ஒருத்தரை காதலிச்சிட்டேன்! தனுஷ் பட நடிகை வேதனை!
இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய ஊரில் ஒரு சர்ச் இருக்கிறது. அந்த சர்ச்க்கு நான் சிறிய வயதில் செல்வேன். அப்போது அங்கு நிறைய கூட்டம் வருவதால் சிலர் தவறாக தொட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். அந்த சமயம் நமக்கு எதுவுமே தெரியாது ஏனென்றால், நாம் அந்த சமயம் ரொம்பவே வயதில் சிறியவர்களாக இருந்திருப்போம். ஆனால், யோசிப்போம் என் நம்மளை இப்படி தொட்டார்கள் என்று.
சர்ச் மட்டும் இல்லை நாம் பேருந்தில் செல்லும் போதும் கூட இந்த மாதிரி விஷயங்களை எதிர்கொண்டு இருப்போம். இது ரொம்பவே தப்பான விஷயம் என்று நான் நினைக்கிறேன். அது அப்போது மட்டுமில்லை இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது என் எதற்காக அப்படி செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பொதுவாகவே இந்த மாதிரி விஷயங்கள் நடந்தால் பெண்கள் யாரும் வெளியே சொல்லமாட்டார்கள்.
அதிலும் நான் எல்லாம் வீட்டில் இந்த விஷயங்களை பற்றி சொன்னது இல்லை. எனக்கு ரொம்பவே வேதனையை கொடுத்தது என்னவென்றால், சர்ச்சில் வைத்து அப்படி ஒருவர் செய்தது தான். அப்படி செய்பவர்கள் எதற்காக சர்ச் வருகிறார்கள் என்றே தெரியவில்லை” எனவும் பாடகி பிரியா ஜெர்சன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025