New Year 2024: ஆங்கில புத்தாண்டுக்கு தலைவர்கள் வாழ்த்து மழை.!

ஒவ்வொரு புத்தாண்டிற்கும் நண்பர்களுடன் வெளியில் செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது, வெளியூருக்கு செல்வது, கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம். பல சாதனைகள் மற்றும் சோதனைகளை கடந்து, இன்றுடன் 2023ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளது. நாளை உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
இந்த 2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த #2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் #Throwback காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…
இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் #2024-ஐ வரவேற்கிறேன்! pic.twitter.com/8B3cdJcGFD
— M.K.Stalin (@mkstalin) December 31, 2023
எடப்பாடி கே. பழனிசாமி
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தனது X தள பக்கத்தில், மக்களின் துன்பங்கள் விலகி இன்பம் பெருகவும், நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் வழங்க வாழ்த்துகள். மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும். மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மலருகின்ற புத்தாண்டில்,
மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல
இறைவனை மனதார பிரார்த்தித்து,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,
புரட்சித்… pic.twitter.com/a3z2QCooH6— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 31, 2023
ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது X தள பக்கத்தில், மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். #NewYear2024 pic.twitter.com/AfreHx6nEz— O Panneerselvam (@OfficeOfOPS) December 31, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025