சிம் கார்டு, இன்டெர் நெட் இல்லாமல் இனி மொபைலில் வீடியோ பார்க்கலாம்..!

மொபைலில் வீடியோக்கள், திரைப்படங்கள் அல்லது டிவி சேனல்களைப் பார்க்க, சிம் கார்டு மற்றும் இன்டெர் நெட் இரண்டும் தேவைப்படுகிறது. இன்டர்நெட் இல்லாமல் மொபைலில் வீடியோ பார்க்க வேண்டும் என பலர் கனவு கண்டு கொண்டிருந்தால் விரைவில் உங்கள் கனவு நனவாக உள்ளது. அடுத்த ஆண்டு டைரக்ட்-டு-மொபைல் (D2M) சேவைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.

இதில், சிம் கார்டு மற்றும் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் வீடியோக்களை பார்க்க முடியும். ஒலிபரப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு செயலர் அபூர்வ சந்திரா பேசுகையில், Sankhya Labs மற்றும் Indian Institute of Technology (IIT) கான்பூர் உருவாக்கிய டைரக்ட்-டு-மொபைல் (D2M) ஒளிபரப்புத் தொழில்நுட்பமானது.19 நகரங்களில் விரைவில் சோதனைகள் நடத்தப்படும் என்றும், டி2எம் தொழில்நுட்பம் நாடு முழுவதும் உள்ள 28 கோடி குடும்பங்களில் 19 கோடி வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன.

US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி..!

நாட்டில் 80 கோடி ஸ்மார்ட்போன்கள் இருப்பதாகவும், அதில் பயனாளர்கள் 69 சதவீதம் பேர் வீடியோ பார்ப்பதாகவும் வீடியோவை அதிகமாகப் பயன்படுத்துவதால், மொபைல் நெட்வொர்க் தடைபடுகிறது என்று சந்திரா கூறினார்.

டிடிஎச் (DTH) எனப்படும் டைரக்ட் டூ ஹோம் (Direct To Home) சேவையைப் போல டைரக்ட்-டு-மொபைல் (D2M) சேவை செயல்படும்.  டி2எம் (D2M) மூலம் தொலைதூர பகுதிகள் அல்லது  இன்டர்நெட்  இல்லாத பகுதிகளில் கூட OTT -யில் வீடியோக்களைப் பார்க்க முடியும். D2M சேவை தொடங்கப்பட்ட பிறகு, D2M சப்போர்ட்(support ) கொண்டபுதிய போன்களும் அறிமுகப்படுத்தப்படும்.

D2M சப்போர்ட்டிற்கு அனைத்து மொபைல் பிராண்டுகளும் தங்கள் தொலைபேசிகளில் D2M ஆண்டெனாவை வழங்க வேண்டும். இது DTH செட்டப் பாக்ஸ் போல் செயல்படும். இதனால், நாட்டின் எந்த மூலையிலும் அமர்ந்து எந்த வீடியோவையும் செயற்கைக்கோள் உதவியுடன் பார்க்கலாம்.  இன்டர்நெட் மூலம் அதிக வருவாய் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவதால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies