மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்ஜிஆர் – பிரதமர் மோடி!
முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் நீங்காத இடத்தில் இருப்பார் என்றே கூறலாம். நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி மற்றோரு பக்கம் முதலமைச்சராகவும் நல்லது செய்து மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இன்று (ஜனவரி 17) எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு கூறப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியீட்டு நினைவு கூர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பக்கத்தில் “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை இன்று நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு தலைவராகவும் இருந்தார்.
அவரது படங்கள், குறிப்பாக சமூக நீதி மற்றும் பச்சாதாபம், வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கமல் சார் ரசிகர்கள் மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியிட்ட புகழ்- குரேஷி!
அவரை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “தமிழ்த் திரையுலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, மக்கள் சகாப்தமாகத் திகழ்ந்த பேராளர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று. ஏராளமான ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த புரட்சித் தலைவரின் ஞாபகங்கள் இன்று போல் என்றும் வாழ்க” என கூறியுள்ளார். மேலும், எம்ஜிஆருடன் கமல்ஹாசன் தனது சிறிய வயதிலேயே ஆனந்த ஜோதி படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.