சிறகடிக்க ஆசை சீரியல் -புது கார் வாங்கும் முத்து ..மனோஜுக்கு ரெடி ஆகும் அடுத்த ஆப்பு..!

siragadikka asai 27

சிறகடிக்க ஆசை இன்று -சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ ஜூலை 27]கதைக்களத்தை இங்கே காணலாம்..

பாட்டிகிட்ட சுருதி கேக்குறாங்க.. நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணீங்களா.. அதுக்கு பாட்டி வெக்கப்பட்டுகிட்டு நான் இல்லம்மா அவர் தான் என்னை லவ் பண்ணினாரு.. அப்படின்னு அவங்களோட காதல் கதையை சொல்றாங்க.. ரவி கேட்கிறார் தாத்தா இருந்துருந்த உங்களுக்கு  ஊட்டிருந்துருப்பாங்கல்ல அப்படின்னு சொல்லுறாரு ,பாட்டியும் ஆமா அப்படின்னு  சொல்றாங்க.. இப்ப முத்து  தாத்தா இல்லாட்டி என்ன பாட்டி நான் உங்களுக்கு  ஊட்டி விடுறேன் அப்படின்னு முத்து  ஊட்டி விடுறாரு.. இப்ப செல்வம் முத்துக்கு கால் பன்னி வர சொல்றாரு.. முத்துவும்  கிளம்பி போறாரு..

மனோஜ் ஷோரூம் ல சாமி கும்பிட்டு இருக்காரு ஏன் கடவுளே இப்படி என்னை வறுத்து எடுக்குறீங்க அப்படின்னு புலம்பிகிட்டு இருக்காரு.. அந்த டைம்ல மிஸ்டர் மனோஜ் அப்படின்னு ஒரு குரல் கேட்கிறது கண்ணை திறந்து பார்க்கிறார் ..ஒருத்தர் லெட்டர் கொடுக்கிறார் அதை வாங்கி படிக்கிறாரு அந்த லெட்டர்ல உங்களை சுத்தி இருக்கிறவங்களால உங்களுக்கு பிரச்சனை வரப்போகுது ஜாக்கிரதையா இருங்க என்ன தேடாதீங்க.. இப்ப மனோஜ் நிமிர்ந்து பார்க்கிறார் லெட்டர் கொடுத்தவர  காணோம். வித்யாவும் ரோகிணியும்  வர்றாங்க என்ன மனோஜ் என்று கேட்கிறார்கள். அந்த லெட்டர் ரோகினி கிட்ட கொடுக்குறாரு.  அதை படிச்சு பாக்குறாங்க..

mano,j vijaya

மனோஜ் இது யாரோ உங்கள பிராங்  பண்றாங்க நீங்க எதுவும் பயப்படாதீங்க அப்படின்னு சொல்றாங்க.. முத்து கார் வாங்கிகிட்டு வீட்டுக்கு வராரு வந்ததும் எல்லாரையும் வெளியில கூப்பிடுறாங்க எல்லாரும் போறாங்க.. விஜயா பாத்துட்டு ஆமா இது பெரிய ஏரோபிளேன் பழசு தானே வாங்கி வச்சிருக்கீங்க அப்படின்னு சொல்றாங்க  ரவி சொல்றாரு முத்து இது பழசு மாதிரியே தெரியல டா நல்லா இருக்குது அப்படின்னு சொல்றாரு. பாட்டியும் முத்துவை ஆசிர்வாதம் பண்றாங்க. இப்போ வாங்க எல்லாரும் கோவிலுக்கு போலாம் அப்படின்னு முத்து சொல்றாரு. எல்லாரும் கார்ல ஏறி உட்காருகிறார்கள்..

அண்ணாமலையும் விஜயாவையும் எப்படியாவது பேச வைக்கணும்னு முயற்சி பண்ணிட்டு இருக்காங்க.. அப்ப முத்து வண்டிய குளிக்க குளிக்க ஓட்டுறாரு விஜயா அண்ணாமலை மேல சாய்ந்துறாங்க இதை பார்த்து நம்ம எல்லாம் நல்லா புடிச்சு உட்காரு அப்படின்னு சொல்றாரு இத பாத்தா மத்த எல்லாருமே கண் ஜாடையிலேயே பாருங்க அப்படின்னு மீனா முத்துகிட்ட சொல்லிட்டு இருக்காங்க.. அதோட இன்னைக்கு ஓட எபிசோட் முடிந்தது. மனோஜ்க்கு லெட்டர் யார் கொடுத்தது என்று நாளைக்கு எபிசோடு காணலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai