புறநகர் ரயில்கள் ரத்து.. கூடுதல் பேருந்துகள் இயக்கம்.! எங்கிருந்து? எப்பொழுது?

ChennaiS - MTC Bus

சென்னை : தாம்பரம் ரயில்வே யார்டு பணிகளுக்காக நாளை (ஆக.3) முதல் 14ம் தேதி வரை காலை 10.30 – பிற்பகல் 2.30 வரை, இரவு 10 – 12 வரை, பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே ரயில்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில், அந்த நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் கூடுதலாக 70 பேருந்துகள் பயணிகள் நலன் கருதி இயக்கப்பட உள்ளது.

அதாவது, தாம்பரம் ரயில் நிலையத்தில் 03.08.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால். காலை 10.30 மணி முதல் பிற்பகல் 14.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும். செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படும் எப்பொழுது இயக்கப்படும் என்பது குறித்து பார்க்கலாம். 

  • மேலே குறிப்பிடப்படி, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி 03.08.2024 முதல் 14.08.2024 வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகள்.
  • பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும்,
  • தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் கூடுதலாக 70 பேருந்துகள் மா.போ.கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளது.

மேலும், காவல்துறையின் வேண்டுகோளின்படி தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி மார்கத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முடிய தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies