‘ஆல் ஏரியாலயும் கில்லி டா’..! தளபதியின் மிரட்டல் சாதனை..கோட் சம்பவம் லோடிங்…!

சென்னை : விஜய் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் போதும் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைக்கும். அவருடைய படங்கள் வசூல் ரீதியாக, பல சாதனைகளை ஏற்கனவே படைத்தது வரும் நிலையில், அவர் தற்போது நடித்து முடித்துள்ள கோட் படம் திரையரங்குகளில் வெளியாவதில் கூட சாதனை படைத்தது இருக்கிறது.
அது என்னவென்றால், கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அணைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறதாம். இதுவரை வெளியான தமிழ் படங்கள் எதுவும் இது போல, அணைத்து திரையரங்குகளிலும் வெளியானது இல்லை. முதல் முறையாக விஜயின் கோட் படம் தான் எல்லா திரையரங்குகளிலும் வெளியாகி புதிய சாதனையை படைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோட் படம் வெளியாக இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இப்படியான தகவல்கள் வெளியாகி கொண்டு படத்தின் மீது இருக்கும் நிலையில், படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறது. படத்தின் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய திரையரங்கு வெளியீட்டு உரிமையை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் படங்களை ப்ரோமோஷன் செய்வதில் எந்த அளவுக்கு சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எனவே, கோட் படத்தின் ப்ரோமோஷன் வேற லெவலில் நடக்கும். படத்தை பற்றி பிரபலங்களும் அடிக்கடி படம் பெரிய அளவில் பேசப்படும் என்று தெரிவித்து வரும் நிலையில், கோட் படத்தினை பார்க்க தான் இந்திய சினிமாவே காத்திருக்கிறது.
கோட் படத்தில் இருந்து ஏற்கனவே, 3 பாடல்கள் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியாகிவிட்டது. இந்த அப்டேட்டுகளை தொடர்ந்து அடுத்ததாக, கோட் படத்தின் டிரைலர் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025