மணிமேகலை vs பிரியங்கா விவகாரம் : கேள்வி கேட்டதால் கடுப்பான புகழ்!

மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையேயான பிரச்சனை குறித்து கேள்வி கேட்ட செய்தியாளருக்கு கோவத்தோடு புகழ் பதில் அளித்துள்ளார்.

pugazh ABOUT priyanka deshpande vs manimegalai

சென்னை : சின்னத்திரையில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள மணிமேகலை vs பிரியங்கா விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்தப்பாடு இல்லை. இந்த பிரச்சனை குறித்து பல பிரபலங்கள் பேசி வரும் நிலையில், பிரியங்கா இன்னும் இது பற்றி பேசாமல் மௌனம் காத்து வருகிறார். இதன் காரணமாக, இந்த பிரச்சனைக்கு இன்னும் முற்றுப்புள்ளி கிடைக்காமல் இருக்கிறது.

இந்நிலையில், பிரபலங்கள் பலரும் இவர்களுடைய பிரச்சனை குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், குக் வித் கோமாளி பிரபலம் புகழ் கோபத்துடன் இதுபோன்ற கேள்விகளை கேட்பதை நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.

READ MORE – “பிரியங்கா vs மணிமேகலை பிரச்னை இப்படி தான் நடந்துச்சு”…உண்மையை உடைத்த குரேஷி!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த புகழிடம் இந்த பிரச்சனைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த புகழ் ” நான் இந்த பிரச்னையை சோஷியல் மீடியாவில் தான் பார்க்கிறேன். இரண்டு பேருக்கு பிரச்சனை என்றால் இருவரும் தான் பேசிக்கொள்ளவேண்டும். அதனை சோஷியல் மீடியாவுக்கு எடுத்துச்செல்லக்கூடாது.

அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பது எங்களுக்கு உண்மையாகவே தெரியாது. உங்களைப்போல நாங்களும் பிரச்சனையை சாதாரணமாக தான் பார்க்கிறோம். என்ன பிரச்சனை என்று தெரியாமல் முதலில் மைக்கை எடுத்துகொன்டு கேள்வி கேட்பதை நிறுத்துங்கள். அப்படி நிறுத்தினாலே இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

பிரச்சனை தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகிவிட்டது என்றால் 1000 பேர் மைக்கை தூக்கிக்கொண்டு வீடியோ போடுகிறார்கள். அவர்கள் இரண்டுபேர் குள் என்ன நடந்திருக்கும் என அவர்களுக்கு தான் தெரியும். என்ன பிரச்சனை ஏற்று தெரியவரட்டும் அதற்கு பிறகு இதனை பற்றி பேசுவோம்” என புகழ் கோபத்துடன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK STALIN - T N GOVT
CM MK Stalin
INDvsENG
Tiruchendur - Murugan Temple
vaibhav suryavanshi shubman gill
laura loomer donald trump