இவங்கள பாத்து கத்துக்கோங்கப்பா! பெண்களுக்கு முன்னுதாரணமான ‘ஓவியா’!

சமீபத்தில் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து நடிகை ஓவியா அதற்கு தக்-லைப்ஃ கொடுத்து கமெண்ட் செய்துள்ளார்.

Oviya

சென்னை : இணையத்தில் சர்ச்சையான வீடியோ ஒன்று வெளியாகி சமீபத்தில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் இருப்பது நடிகை ஓவியா தான் என நெட்டிசன்கள் கூறி வந்தனர். மேலும், ஓவியாவின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களுக்கு கீழ் கமெண்ட் செய்தும் வந்தனர்.

அந்த நெகடிவ்வான கமெண்ட்ஸ்க்கு ஓவியா அவரது ஸ்டைலில் ‘தக் லைஃப்’ ரிப்லே கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இப்படி பட்ட பிரச்சினையைக் கூட அவர் கூலாக கையாளும் விதம், இது போன்ற சர்ச்சையில் சிக்கி தவிக்கும் பெண்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர், இருந்தாலும் அவருக்கு மார்க்கெட் அந்த அளவிற்கு இல்லாமல் தான் இருந்தது. ஆனால், அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவரது பெயர் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

இருப்பினும், ஏற்கனவே கிடைத்திருந்த நல்ல பெயர்கள் வீணாய் போனது. இருந்தாலும் அவர் அதை குறித்து கண்டுக்காமல், 90 ml போன்ற படங்கள் நடித்து கொண்டு தான் வந்தார். சினிமா நடிகை என்றாலே பலரும் பல கதை சொல்வார்கள்.

அதிலும், அவர்களது சம்மந்தப்பட்ட ஏதேனும் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானாலோ அது உண்மையா? அல்லது எடிட்டிங்கா? என்று கூட ஆராயாமல் நெட்டிசன்கள் இணையத்தில் ட்ரோல் மெட்டீரியல் ஆக்குவார்கள். இப்படி பல நடிகைகள் சிக்கி அவர்களது கேரியரை தொலைத்திருக்கிறார்கள்.

இது சினிமா நடிகைகள் தாண்டி சாதாரணமாக பள்ளியில், கல்லூரியில், அல்லது வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்குமே பொருந்தும். இது போன்ற சர்ச்சைகளில் நடிகை திரிஷா, சமீபத்தில் ராஷ்மிக்கா மந்தனா போன்ற நடிகைகள் சிக்கியும், ஏன்? பல இளம் பெண்கள் சிக்கியும் பார்த்திருப்போம்.

இதன் மூலம் அவர்களது பெயர் அடிவாங்குவது முதல் தற்கொலை வரை சென்ற சம்பவம் கூட இங்கு நடந்திருக்கிறது. இது போன்ற பிரச்சினையை ஒரு பெண் தையிரியதுடன் கையாளும் விதமே அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும். அது போன்ற ஒரு சம்பவத்தை தான் தற்போது நடிகை ஓவியா கையாண்டுருக்கிறார்.

சர்ச்சையான வீடியோ :

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று 17-வினாடிகள் அடங்கிய ஒரு சர்ச்சை அதாவது ஆபாசமான ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் இருப்பது ஓவியா தான் என நெட்டிசன்கள் கூறி வந்தனர். மேலும், ஓவியாவின் இன்ஸ்டா பக்கத்தில் அவர் ஏற்கனவே பதிவிட்டிருந்த போட்டோவின் கமெண்ட் பாக்சில் சென்று நெகடிவ்வாக கமெண்ட் செய்தும் வந்தனர்.

ஓவியா கையாண்ட விதம் :

இந்த நிலையில் ஓவியா இதற்கு, இது நான் இல்லை இது மார்ஃபிங் தான் என மறுப்பு தெரிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் இந்த பிரச்சினைகளைப் பற்றி அவரது கமெண்ட் பாக்சில் பேசி வந்தவர்களுக்கு தக்-லைஃப் ரிப்லெ கொடுத்திருக்கிறார்.

அதாவது ஒரு நெட்டிசன், ‘ ஒரு வீடியோஒன்னு வந்திருக்கு மேடம் 17 செகன்ட்ல’ என கேட்டதற்கு ஓவியா அதற்கு “என்ஜாய்” என தக்-லைஃப் கமென்ட் போட்டுள்ளார். மேலும், மற்றொரு நெட்டிசன், ‘இன்னும் லெந்த்தா வீடியோ எடுத்திருக்கலாம்’ என கமெண்ட் செய்திருந்தார்.

அதற்கு, ‘அடுத்த முறை சகோதரா’ என பதிலளித்துள்ளார். மற்றொருவரிடம் ஓவியா, ‘லிங்க் சென்ட் பண்ணுங்க’ என்றும் கமெண்ட் போட்டுள்ளார். இதன் மூலம், என்னவாக (அந்த வீடியோ உண்மையோ அல்லது மார்ஃபிங்கோ)  இருந்தாலும் சரி, என்ன ஆனாலும் பார்த்து கொள்ளலாம் என கையாளும் இந்த முறையே.. அந்த பிரச்சினை அத்துடன் முடிப்பதற்கு ஒரு ஆயதமாக அமைந்துள்ளது.

முன்னுதாரணமான ஓவியா :

சினிமா பிரபலங்களைத் தாண்டி சாதாரண பெண்கள் பல பேர் இதே போல பல பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும் என ஓவியாவை பார்த்து கற்றுக் கொள்ளலாம்.

அதாவது, உதாரணமாக நமது தனி பட்ட வீடியோவோ அல்லது புகைப்படத்தை வைத்தோ சிலர் மிரட்டுகிறார்கள் என்றாலோ அல்லது அதை வைத்து பரப்பி ட்ரோல் செய்கிறார்கள் என்றாலோ, ஆனதை பார்த்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு வருவதை எதிர்கொண்டாலே போதும் என முடிவெடுக்க வேண்டும். தற்போது அதை தான் ஓவியா செய்திருக்கிறார் என அவர் இப்படி செய்ததன் மூலம் தெரிகிறது.

இதற்கு முன் பல சினிமா பிரபலங்கள் இது போன்ற சர்ச்சையில் சிக்கி இருந்தாலும் அவர்கள் அது நாங்கள் இல்லை எனக் கூறியிருக்கின்றனர். ஆனாலும் அவர்களை நெட்டிசன்கள் அசிங்கப்படுத்தி பல பதிவுகளை பதிவிட்டு வருவார்கள். அது காலப்போக்கில் காற்றில் அப்படியே கரைந்து விடும்.

அதே போல தான் இன்று ஒரு பிரச்சினை, நாளை ஒரு பிரச்சினை என பேசி கொண்டிருக்கும் இந்த சமூகத்தில் இது போன்று ஒரு முடிவெடுத்தாலே அது பலமான ஒரு ஆயுதம் தான். அதை தான் சரியாக செய்திருக்கிறார், ஓவியா செய்த இந்த தக்-லைஃப்பால் வாயடைத்து தான் போவார்களே தவிர மேற்கொண்டு எதுவும் பேசமுடியாது. அதனால், இது போன்ற பிரச்சினையில் இப்படி முடிவெடுத்ததன் மூலம் ஓவியா பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறி இருக்கிறார், இதனால் பலர் அவருக்கு ஆறுதலாகவும் பேசி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai