தீபாவளி அன்று செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள்..!

தீபாவளி பண்டிகை அன்று கங்கா  ஸ்நானம்  செய்யும் நேரம், கேதார கௌரி பூஜை ,லட்சுமி குபேர பூஜை  போன்ற வழிபாடுகளை செய்யும் நேரம் மற்றும் அதன் பலன்களை இந்த ஆன்மீக செய்தி  குறிப்பில் காணலாம்.

diwali 2024 (1) (1) (1)

சென்னை –தீபாவளி பண்டிகை அன்று கங்கா  ஸ்நானம்  செய்யும் நேரம், கேதார கௌரி பூஜை ,லட்சுமி குபேர பூஜை  போன்ற வழிபாடுகளை செய்யும் நேரம் மற்றும் அதன் பலன்களை இந்த ஆன்மீக செய்தி  குறிப்பில் காணலாம்.

தீபாவளி 2024:

அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி அன்று காலை 3:30 மணிக்கு துவங்கி 6 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி பூஜைகள் செய்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிகாலை மூன்று முப்பதிலிருந்து ஐந்து முப்பது வரையிலும் உள்ள நீரில் குளிப்பது கங்கையில் குளித்த பலனை பெற்றுத் தரும் என்பது ஐதீகம்.

இந்த நேரத்தில் பூஜைகளை வைத்துக் கொள்ள முடியாதவர்கள் காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் பூஜை செய்து புத்தாடை உடுத்தி வழிபாடுகளை மேற்கொள்ளலாம். தீபாவளி அன்றைய தினத்தில் சதுர்தசி நோன்பும் கடைப்பிடிக்கப்படுகிறது. காலை 9:00 மணி முதல் 12 மணி வரை இந்த சதுர்த்தசி வழிபாடும் மேற்கொள்ளலாம்.

கேதார கௌரி விரதம்;இந்த விரதம் பொதுவாக 21 நாட்கள்  மேற்கொண்டு வழிபாடு செய்யப்படுகிறது. அக்டோபர் 12  அன்று துவங்கி நவம்பர் 1ம்  தேதி முடிவடைகிறது. இந்த விரதம் ஒரு நாள் மட்டும் செய்யக்கூடிய முறையும் உள்ளது .அந்த வகையில் கேதார கௌரி விரதம் நவம்பர் ஒன்றாம் தேதி சிவபெருமானையும் பார்வதி தேவையும் வைத்து வழிபாடுகளை செய்து கொள்ளலாம்.

லட்சுமி குபேர பூஜை ; தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையும் மேற்கொள்வது சிறப்பாக கூறப்படுகிறது அதுவும் அமாவாசை திதி நேரத்தில் மேற்கொள்வது உத்தமமாக கூறப்படுகிறது. அமாவாசை திதி அக்டோபர் 31ஆம் தேதி மாலை 4;24  க்கு துவங்குவதால் லட்சுமி குபேர பூஜையை மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிக்குள் செய்து கொள்ளலாம்.

அமாவாசை வழிபாடு;இந்த வருடம் அமாவாசை திதி அக்டோபர் 31 தீபாவளி அன்று மாலை 4; 24 நிமிடத்திற்கு துவங்கி நவம்பர் 1ஆம் தேதி மாலை 6:20 க்கு முடிவடைகிறது .அமாவாசைக்கு தர்ப்பணம், சிரார்த்தம், படையல் போடுபவர்கள் நவம்பர் 1ஆம் தேதி அன்று செய்ய வேண்டும்.

பலன்கள்;

  • தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்து பூஜை செய்வதனால் அஷ்ட ஐஸ்வரியமும் பெருகும்.
  • சதுர்த்தசி வழிபாடு மேற்கொள்வதால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும், குடும்பத்தில் நன்மை நடக்கும்.
  • கேதார கௌரி விரதம் இருப்பதால் தீர்க்க சுமங்கலி வரமும், கணவன் மனைவி ஒற்றுமை, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வது போன்ற பலன்களை பெற்றுத் தரும்.
  • லட்சுமி குபேர பூஜை செய்வதால் ஐஸ்வர்யமும், தன தானியமும் ,செல்வ வளமும் பெருகும். அதிலும் தீபாவளி அன்று செய்யப்படும் லட்சுமி குபேர பூஜை மிக மிக சக்தி வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஆகவே இந்த தித்திக்கும் தீபாவளியை போல்  உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்க தீபாவளியின் வழிபாடுகளையும் மேற்கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY