லீக்கான அந்த மாதிரி வீடியோ? சமூக வலைத்தளங்களிருந்து விலகிய பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம்!
பாகிஸ்தானைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் இம்ஷா ரஹ்மான், தனிப்பட்ட வீடியோக்கள் என கூறி சில வீடியோக்கள் ஆன்லைனில் கசிந்ததையடுத்து தனது சமூக வலைத்தளங்களில் இருந்து அவர் விலகினார்.

பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது சர்ச்சையில் சிக்கினால் கூட அந்த செய்தியும் ஒரு ட்ரெண்டிங்கான செய்தியாக மாறிவிடுகிறது.
அப்படி தான், பாகிஸ்தானில் டிக்டாக் தளத்தில் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் இம்ஷா ரஹ்மான். இவருக்கு டிக் டாக் தளத்தில் மட்டும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். எனவே, ரசிகர்களை மகிழ்விக்க தனது பக்கத்தில் வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டுக்கொண்டே இருந்தார்.
இந்த சூழலில், தான் திடீரென அவருடைய தனிப்பட்ட வீடியோ என கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ மிகவும் வைரலாக பரவியது. அந்த வீடியோவை பார்த்த அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியானது போல அவருக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இது AI -மூலம் எடிட் செய்யப்பட்ட ஒரு வீடியோவாக இருக்கலாம் எனவே, இது போலியான வீடியோ என இம்ஷா ரஹ்மான் விளக்கம் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், இந்த சம்பவத்தில் அவர் மிகவும் வேதனையடைந்ததாக தெரிய வந்துள்ளது. ஏனென்றால், இதுபோன்ற வீடியோக்கள் லீக்கான காரணத்தால் இம்ஷா ரஹ்மான் தன்னுடைய சமூக வலைதளபக்கங்களை முடக்கம் செய்துவிட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அவர் எதுவும் விளக்கம் கூட சொல்லாமல் சென்றது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயம், நாம் சமூக வலைத்தளங்களில் இருப்பதால் தான் இப்படியான பிரச்சினைகள் வருகிறது..சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்தால் இது போன்ற பிரச்சினைகள் வராது என அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியது குறித்து விளக்கம் அளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!
July 3, 2025